பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும்.
தற்போது வியாழன் சுக்கிரன் ஆளும் ராசியான ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. கடந்த காலங்களில் நேர்கோட்டில் நகர்ந்து வந்த வியாழன் வக்ர பெயர்ச்சியடையவுள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் இருக்கும்.
அந்த வகையில், மேஷம் முதல் மீனா வரையிலான ராசிகளுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
| - புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.
-
சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.
- உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
-
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
|
ரிஷபம் ராசி
| - மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
|
மிதுனம் ராசி
| - மனதில் தைரியம் அதிகரிக்கும்.
-
வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
- வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும்.
|
கடகம் ராசி
| - பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
- அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
|
சிம்மம் ராசி
| - புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
-
சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
-
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
|
கன்னி ராசி
| - மனதில் தைரியம் அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
- பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
-
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
|
துலாம் ராசி
| - காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
-
கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
|
விருச்சிகம் ராசி
| - தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
|
தனுசு ராசி
| - அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.
|
மகரம் ராசி
| - எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.
- வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
- அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
-
வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
|
கும்பம் ராசி
| - மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
- தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
- வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
|
மீனம் ராசி
| - உற்சாகமான நாள்.
-
சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
- வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும்.
- காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).