thakkali sadam: பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் தக்காளி சாதம்
தக்காளியில் வைட்டமின் ஏ, சி செறிந்து காணப்படுவதால், இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியன போதுமான அளவில் உள்ளது.
தக்காளியில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் அதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் வறட்சியடையாமல் எப்போதும் நீரேற்றத்துடன் இருப்பதற்கு தக்காளி பெரிதும் துணைப்புரிகின்றது.
வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமி தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கின்றது.
மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு தக்காளி அருமருந்தாகும். தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஆண்கள் தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், 20 சதவீதம் புரோஸ்டேட் எனும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க முடியும்.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த தக்காளில் எவ்வாறு அசத்தல் சுவையில் தக்காளி சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
முந்திரி - 5
பச்சை மிளகாய் - 2
அரிசி - 1.½ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தே.கரண்டி
நெய் - 1 தே.கரண்டி
பட்டை, இலவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லி தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - ½ தே.கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பெரிய தக்காளி - 2 நறுக்கியது
செய்முறை
முதலில் 4 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து,நெய் உருகியதும் பட்டை, இலவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, அதனை தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் சமைக்கவும்.
பின்னர், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசியும் வரை சமைக்கவும்.
இப்போது அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு ஊறவைத்த அரிசியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது குக்கரை மூடி, அதிக தீயில் 2 விசில் வரும் வரை மூடி வேகவிட வேண்டும்.
அதனையடுத்து அடுப்பை அனைத்து விசில் அடங்கும் வரையில் ஆறவிட்டு குக்கரை திறந்து சுவையான தக்காளி சாதத்தை தயிருடன் பரிமாறலாம். சுவை பிரியாணிணை மிஞ்சும் அளவுக்கு அட்டகாசமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |