potato fry: கறிசுவையை மிஞ்சும் உருளைக்கிழங்கு வறுவல்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியவர்களும் விரும்பி சாப்பிடும் சைவ உணவுப்பட்டியலில் நிச்சயம் உருளைக்கிழங்கு இடம்பிடித்துவிடும்.
காய்கறியே விரும்பாத குழந்தைகள் கூட உருளைக்கிழங்கு என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு தனித்துவமான சுவையும் ஊட்டச்சத்துக்களும் கொண்டது.
மிகவும் எளிமையாக முறையில் ஹோட்டல் பாணியில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லி இலை - சிறிதளவு
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 200 கிராம்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து வேகவைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதனையடுத்து ஏனைய அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு மொறுகும் வரையில் வறுத்தெடுத்தால், அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு வருவல் தயார்.
இதனை சாம்பார் சாதம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |