Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு
தற்போது மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டதால் மாம்பழங்கள் மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
மாம்மழ சீசன் இருக்கும் போதே இந்த மாம்பழாதத்தில் இந்த மோர் குழம்பை ஒரு முறையேனும் செய்து பாருங்கள். எப்படி எளிமையான முறையில் அசத்தல் மாம்பழ குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு -2 மேசைக்கரண்டி
பச்சரிசி -1தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்.கரண்டி
தேங்காய்- 1/2 கப்
புளித்த தயிர் -1/2 கப்
மாங்காய் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)-1 கப்
காய்ந்த மிளகாய் -3
கறிவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் தாளிப்பதற்கு- தேவையானஅளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சிறிதளவுபெருங்காயத்தூள்
சிறிதளவுமஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
1 கப் தண்ணீர்
செய்முறை
முதலில் துவரம்பருப்பு பச்சரிசி இரண்டையும் நன்றாக தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் வரையில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைசேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பாதியளவுக்கு வேகவிட வேண்டும்.
மாங்காய் பாதி வெந்ததும் அரைத்த கலவையை ஊற்றி பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் புளித்த தயிரை ஊற்றி கட்டிகள் இல்லாத வகையில் நன்றாக கலந்துவிட வேண்டும். பின்பு 1/2 கப் தண்ணீர் சேர்த்து ,லேசாக நுரைத்து வரும் வரை கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக நுரைத்து வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொறிந்ததும் மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பில் ஊற்றினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் மாங்காய் மோர் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |