kondakadalai sundal: மார்பக புற்றுநோயை தடுக்கும் கொண்டைக் கடலை சுண்டல்!
பொதுவாகவே கொண்டைக்கடலை மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரொக்கியமான தானியமாக பார்க்கப்படுகின்றது.
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சீராக பராமரிப்பதிலும் கொண்டை கடலை ஆற்றல் மிக்கது. தினசரி கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போரா உதவும்.
மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டை கடலை துணைப்புரியும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட கொண்டைக்கடலையில் எவ்வாறு அசத்தல் சுவையில் சுண்டல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
கடுகு உளுந்து - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ½ தே.கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் இரவே கடலையை நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
அதனையடுத்து ஒரு குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனை கடலையில் கொட்டி கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து தேங்காயைச் சேர்த்து, கிளறிவிட்டால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
