பார்த்தாலே பசியை தூண்டும் கொத்தமல்லி துவையல்... இப்படி செய்து பாருங்க
கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றனவும் இதில் செறிந்து காணப்படும்.
ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை பெரிதும் துணைப்புரிகின்றது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து விடும். கொத்தமல்லியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், கெட்ட கொலஸ்ரால் குறைவடைகின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொத்தமல்லியில் எவ்வாறு நாவூரும் சுவையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 1 கொத்து
நல்லெண்ணெய் - சிறிதளவு
பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் - தேவையான அளவு
கருப்பட்டி அல்லது வெல்லம் - சிறிதளவு
பூண்டு - 5 பற்கள்
உப்பு - தேவையான அளவு
புளி சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளி சேர்த்து நன்கு வதக்கிய பின்னர்,அவற்றுடன் மல்லி தழை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இவை அதனைத்தும் நன்கு ஆறிய பின்னர் அவற்றுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் அதனுடன் தாளிப்பு சேர்த்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |