garlic pickle : பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது?
பொதுவாகவே உணவிற்கு சுவை சேர்ப்பதில் ஊறுகாய்கள் எப்போதுமே முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
எலுமிச்ரச ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், என பல வகைகளில் ஊறுகாய் காணப்படுகின்றது.
அந்த வகையில் ஊறுகாய் பிரியர்கள் அதிகமாக விடும்பும் பூண்டு ஊறுகாயை எளிமையான முறையில் அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு -500 கிராம்
மிளகாய் தூள் -1கப்
கடுகு -1தே.கரண்டி
வெந்தயம் -1/2 தே.கரண்டி
புளி -50கிராம்
உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் -1/4 லிட்டர்
கடுகு - 1 தே.கரண்டி
மிளகாய் - 2வற்றல்
கறிவேப்பிலை
செய்முறை
முதலில் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து,வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு,வற்றல், கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு, உரித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு புளிக்கரைசல்,மிளகாய் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வரையில் கெட்டியாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடித்து வைத்துள்ள கடுகு வெந்தயப் பொடியையும் அதில் சேர்த்து, நன்றாக கலந்துவிட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கி, எண்ணை பிரிந்து வரும் போது இறக்கினால் அவ்வளவு தான் சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.
பூண்டு ஊறுகாய் ஆறியவும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இது பூண்டின் நற்குணங்களுடன் இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |