தேங்காய், தக்காளி இல்லாமல் டேஸ்டியான சட்னி! நாவூறும் சுவையில் செய்வது எப்படி?
தினமும் வீட்டில் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சாப்பிட்டு போரடிச்சுன்னு நினைக்கிறவங்களுக்காகவே புதுவித சுவையுடன் சட்னி தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் வேர்க்கடலை - ஒரு கப் பொட்டுக்கடலை- 1/4 கப் உளுத்தம் பருப்பு அல்லது கடலை பருப்பு- 1/4 கப் பூண்டு - 1 கைப்பிடி அளவு (விருப்பம் இருந்தால் மட்டும்) மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன் புளி கரைத்த நீர்- 1/2கப் வரமிளகாய்- 4 அல்லது 5 கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் உப்பு- தேவையான அளவு செய்முறை கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பை நன்றாக வறுத்து கொள்ளவும், இதனுடன் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும், அடுத்ததாக மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும், அடுப்பை அணைத்த பின்னர் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும், தொடர்ந்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய் சேர்த்து வதக்கியதும், பெருங்காயத்தூளை சேர்த்து சட்னியில் ஊற்றினால் சுவையான சட்னி தயார்!!!