ஒரு பீட்ரூட் இருந்தா போதும்... டக்குன்னு இப்படி மதிய உணவு ரெடி பண்ணுங்க!
பொதுவாகவே பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் மதிய உணவுக்கு என்ன சமைப்பதென்பது.
குறிப்பாக சில தினங்களில் வேறு வீட்டு வேவைகளில் ஈடுப்பட்ட பின்னர் சமைப்பதற்கு தாமதமாகிவிட்டால், விரைவாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய பீட்ரூட் புலாவை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
நெய் - 1 தே.கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
புதினா - 1 கைப்பிடி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
பீட்ரூட் - 1 (துருவியது)
தயிர் - 2 தே.கரண்டி
பாசுமதி அரிசி - 1 கப் (2 கப் நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் இரு முறை சுத்தம் செய்துவிட்டு பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி, 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணகாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதழனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதில் கைப்பிடியளவு புதினாவை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து, மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை, சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில், துருவிய பீட்ரூட்டையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், அதில் தயிரையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு ஊற வைத்த பாசுமதி அரிசியை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையான பீட்ரூட் புலாவ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |