செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது!

Eye Problems Constipation Healthy Food Recipes Skin Care Immune System
By Vinoja Jun 11, 2026 05:00 PM GMT
Report

பொதுவாகவே ஆரோக்கியமான தானியங்களின் பட்டியலில் தட்டைப்பயறு முக்கிய இடம் வகிக்கின்றது.இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரியும். குறிப்பாக வயதாகும் போது உண்டாகிற கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty And Healthy Cowpeas Gravy Recipe In Tamil

மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்திருப்பதால்,  நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

அது மாத்திரமன்றி குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க உதவி செய்யும். தட்டைப்பயறில் உள்ள கரோட்டினாய்டுகள், ஃபிளவனாய்டுகள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

அதனால் தினசரி உணவில் தட்டைப்பயறு சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty And Healthy Cowpeas Gravy Recipe In Tamil

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் தட்டைப்பயறில் அசத்தல் சுவையில் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். 

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையானவை 

துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன் 

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

சோம்பு - 1 டீஸ்பூன் 

கசகசா - 1 டீஸ்பூன்

கிராம்பு - 3 

பட்டை - 1 துண்டு 

கல்பாசி - சிறிது

தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

தட்டைப்பயறு - 1 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது) 

உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது) 

அரைத்த தேங்காய் விழுது

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிதளவு 

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty And Healthy Cowpeas Gravy Recipe In Tamil

செய்முறை

செய்முறை முதலில் தட்டப்பயறை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை மற்றும் கல்பாசி ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty And Healthy Cowpeas Gravy Recipe In Tamil

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

அடுத்து மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூளை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். பின்னர் ஊறவைத்த தட்டப்பயறை சேர்த்து, தோல் நீக்கி துண்டுகளாக்கிய 2 உருளைக்கிழங்குகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty And Healthy Cowpeas Gravy Recipe In Tamil

சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்யனும் தெரியுமா?

சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்யனும் தெரியுமா?

பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பி்ன்னர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி 3–4 விசில் வரும் வரை வேகவிடவும்.

விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லித்தழை தூவி கிளறினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் தட்டப்பயறு குழம்பு தயார்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US