தமிழா தமிழா: வெளிநாட்டு வேலையில் இவ்வளவு ஆபத்தா? அனுபவித்த கொடுமைகளை பகிர்ந்த நபர்!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், பலவருடங்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நபரொருவர் தான் வெளிநாட்டில் வேலைக்கு சென்றதால், அனுபவித்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அறியப்படுகின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை ஒத்த பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், இந்த வாரம் பலவருடங்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்றுள்ளது. இதன் சில காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |