அவமானப்படுத்திய மூத்த மருமகள்! மேடையில் கண்ணீர் விட்ட பெண்... தொகுப்பாளரின் தெறி பதில்
இந்த வார தமிழா தமிழா சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் மூத்த மருமகள்கள் மற்றும் இளைய மருமகள்கள் என்ற இரு தரப்பினருக்கும் இடையில்,காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற இளைய மருமகள்கள் அணியின் ஒரு பெண் தான் காதல் திருமணம் செய்துக்கொண்டு கணவன் வீட்டுக்கு சென்றதால்,சீதனமாக எதையும் கொண்டு செல்லாததை குத்திக்காட்டும் வகையில் மூத்த மருமகள் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தியதாக குறிப்பிட்டு மேடையில் கண்ணீர் மல்க பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் ஜீ தொலைக்காட்சியில், நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதில் சின்ன மருமகளை அவமானப்படுத்திய மூத்த மருமகளுக்கு தொகுப்பாளர் ஆவுடையப்பன் கூறிய நெத்தியடி பதில் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |