Tamilzha Tamizha: ஒரு மனுஷன் நிம்மதியா கூட திரும்பி படுக்க முடியலை! தொகுப்பாளரை கதறவிட்ட பெண்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிப்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்கும் நபர்கள் மற்றும் பெண் குழந்தைகள் இல்லை என்று ஏங்கும் நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
பொதுவாகவே முந்தைய காலத்திலிருந்தே வயிற்றில் குழந்தை வளர ஆரம்பித்துவிட்டால் சில அறிகுறிகளை வைத்து குழந்தையின் பாலினத்தை கூறுவது உண்டு.
இந்நிகழ்ச்சியில் நாம் சற்றும் தெரிந்திடாத பல அறிகுறிகளை இவர்கள் கூறி பார்வையாளர்களை மட்டுமின்றி நடுவர்களையே அதிர வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |