Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி
Tamizha Tamizha: தமிழா தமிழா நிகழ்ச்சியில் கணவரின் முன்னாள் காதலை அறிந்த மனைவிகள் மற்றும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சிகளில் நடைபெற்று விவாத நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா. மற்றொரு ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா மிகவும் பிரபலம் ஆகும்.
இவ்வாறான நிகழ்ச்சிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப்போகும் ஏதேனும் ஒரு தலைப்பினை கொண்டு விவாதிக்கப்படும்.
அந்த வகையில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் கணவரின் முன்னாள் காதலை அறிந்த மனைவிகள் மற்றும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகின்றது.
இதில் கணவரின் முதல் காதலை அறிந்து கொண்ட மனைவிகள், கணவரின் செயல்பாடுகளைக் குறித்து பேசியுள்ளனர். இதில் பெண் ஒருவரிடம் கணவரின் முதல் காதலி போன் செய்து இவனெல்லாம் ஒரு ஆளுனு ஏன்ம்மா கல்யாணம் பண்ணுன? என்று கேட்டுள்ளார்.
கணவரின் சமூக வலைத்தளங்களில் முன்னாள் காதலியைக் கண்டுபிடித்ததாக கூறுகின்றார் மற்றொரு பெண். இதற்கு கணவர் அதனை அழிக்கமாட்டேன் என்று கூறுகின்றார்.

குறித்த நபரின் மனைவி முன்னாள் காதலியின் வளைகாப்பு, குழந்தை, திருமணம் என அனைத்தையும் அழிக்காமல் வைப்பதாக கூறியதற்கு, கணவரும் தான் அழிக்கமாட்டேன். பார்க்கத் தோன்றும் போது பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக மனைவி, நானும் என்னுடைய பழைய காதலனை எடுத்து பார்த்தால் விடுவாங்களா? என்று கேட்டுள்ளார். மனைவியின் இந்த கேள்விக்கு கணவரின் முகம் மொத்தமாகவே மாறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |