Tamizha Tamizha: வீட்டில் ஆண் யாரும் இல்லை... அரங்கத்தில் தங்கையின் கண்ணீர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமணத்தை தள்ளிப்போடும் மூத்த பிள்ளை மற்றும் அவசரப்படுத்தும் இளைய பிள்ளை என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் திருமணத்தை தள்ளிப்போடும் மூத்த பிள்ளை மற்றும் அவசரப்படுத்தும் இளைய பிள்ளை என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் குடும்ப பாரத்தை சுமக்கும் வீட்டில் பெரிய பிள்ளைகளை சின்ன பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வதற்கு வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் கூறியுள்ள காரணம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. சின்ன பெண் ஒருவர் தனது அக்காவை திருமணம் செய்து கொள்ள அவசரப்படுத்துகின்றார்.
ஆனால் பெரிய பெண் தனது தந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்திற்காக வேண்டாம் என்று கூறுகின்றார். சின்ன பெண்ணிடம் திருமணம் முடிக்க கூறுவதற்கு காரணம் என்ன என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
இதற்கு குறித்த தங்கை வீட்டில் ஆண் இல்லை... இரண்டாவது அம்மாவாக பார்த்துக் கொள்ளும் அக்காவை வரும் மாப்பிள்ளை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும் என்று கூறி அழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |