Tamizha Tamizha: ஏஞ்சல் மாதிரி வளர்த்த பெண்ணின் அவலநிலை... கண்கலங்கிய அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஏஞ்சல் போன்று வளர்க்கப்பட்ட பெண் கணவரின் கொடுமை காரணமாக தனியாக வாழ்ந்து தன்னை பார்த்துக் கொள்ளும் சம்பவத்தினை கூறியுள்ளார்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் தனி ஆளாய் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெண் ஒருவர் இரண்டு மூளைவளர்ச்சி இல்லாத குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலை செய்து குடும்பத்தை பார்த்து வருகின்றார்.
மற்றொரு பெண் வீட்டில் ஏஞ்சல் மாதிரி வளர்க்கப்பட்டவர், திருமணத்திற்கு பின்பு மோசமான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் அவரின் தைரியம் அரங்கத்தில் நடுவரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |