Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் சனிப்பெயர்ச்சி 2025 என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் சனிப்பெயர்ச்சி 2025 என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் அநேக ஜோதிடர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளாக ரிஷபம், துலாம், மகரம் ராசிகளும், சோதனைகளை சந்திக்கும் ராசிகளாக மீனம், சிம்மம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் மற்றொரு ஜோதிடர் மீன ராசியினர் இந்த சனிபெயர்ச்சியில் மிகவும் அழகாக செயல்படுவார்கள் என்று கூறி தொகுப்பாளரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |