சேலை 20 ஆயிரம்... சட்டைக்கு 25 ஆயிரமா? வாயடைத்துப் போன அரங்கம்
பெண் ஒருவர் திருமணத்திற்கு 20 ஆயிரத்திற்கு பட்டுப்புடவை எடுத்துவிட்டு அதற்கு சட்டை தைப்பதற்கு செலவு செய்த பணம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
தமிழா தமிழா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு தலைப்பை கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை போன்றதாக இருந்தாலும், நீயா நானா கோபிநாத்திற்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்து வருகின்றது.
தமிழா தமிழா நிகழ்ச்சியினை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், மனைவியின் புடவை ஆசை குறித்து பேசப்பட்டுள்ளது.
இதில் அப்பாவிகளாக இருக்கும் கணவன்மார்கள் மனைவியிடம் என்ன பாடுபடுகின்றனர் என்பதைக் காட்டியுள்ளது. பெண் ஒருவர் திருமணத்திற்கு 10 கடைகள் ஏறி இறங்கி இறுதியாக 20 ஆயிரத்திற்கு ஒரு புடவையை எடுத்துள்ளார்.
ஆனால் இதற்கான சட்டைக்கு மட்டும் ரூபாய் 25 ஆயிரம் செலவு செய்துள்ளார். வித்தியாசமான கைவேலைகளை செய்து ராயலாக தைத்து போட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் கதையும் மிகவும் வித்தியாசமாக பார்வையாளர்களை வாயடைக்கவே வைத்துள்ளது.