Tamizha Tamizha: அப்பா வயது நபரின் மோசமான செயல்! அரங்கத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் யார் வாழ்க்கை மிகவும் துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் யார் வாழ்க்கை மிகவும் துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் கணவனை இழந்த பெண்களை இந்த சமூகத்தில் உள்ள சில கேடுகெட்ட ஆண்கள் நடத்தும் விதம் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
பெண் ஒருவரின் கணவர் இறந்த பின்பு அவரை பார்க்கும் பார்வை, தொடும் இடம் என மோசமாக உள்ளது. மற்றொரு பெண்கள் சொந்தத்தில் உள்ளவரே தன்னிடம் தவறாக நடந்து கொண்டாதாக கூறியுள்ளார்.
மற்றொருவர் மண் தின்னும் உடம்பு தானே... நாங்கள் சாப்பிடக்கூடாதா? என்ற கேள்வி எழுப்பியதாக அரங்கத்தில் பல உண்மையை உடைத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |