Tamizha Tamizha: கர்ப்பிணி பெண்கள் செய்யும் அலப்பறைகள்! அப்பாவியாகும் கணவர்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கர்ப்பகால பெண்களின் கனவுகளும், கவலைகளும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் கர்ப்பகால பெண்களின் கனவுகளும், கவலைகளும் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
கர்ப்பமான பெண்கள் தங்களது கணவர்களை பாடாய் படுத்தி எடுக்கும் காட்சியினை அவதானித்த, பெண்ணின் உறவினர் தனது ஆதங்கத்தை அரங்கத்தில் கொட்டியுள்ளனர்.
இதில் பெண் ஒருவர் வயிற்றில் உள்ள குழந்தை ஐஸ்கிரீம் கேட்பதாக கூறி கணவரிடம் அடம்பிடித்துள்ளார். இதனால் கணவர் பயங்கரமாக புலம்பி தள்ளியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |