Tamizha Tamizha: 10 வயதில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலை... இன்று இளைஞர் சம்பளத்தால் பிரமிப்பில் அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் மற்றும் குடும்ப நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் பல வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் மற்றும் குடும்ப நபர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
குடும்பத்திற்காக பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டவர்கள் இன்று என்னவாக இருக்கின்றனர் என்பதைக் கேட்டு அரங்கமே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.
நபர் ஒருவர் தான் கஷ்டப்பட்டாலும் பிள்ளையை பிஸியோதெரபிக்கு படிக்க வைத்ததாக கூறியுள்ளார். மற்றொரு இளைஞர் 10 வயதில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார்.
இன்று அவரது படிப்பினால் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி தனது தாய்க்கு பெரும் சேர்த்துள்ளார். இளைஞரின் பேச்சினால் அரங்கமே பூரித்து போயுள்ளது.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |