Tamizha Tamizha: ஹீரோ மாதிரி வரமுடியுமா சார்? அம்மாக்களின் நகைச்சுவை ஆதங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வருந்தும் பெற்றோர்கள் மற்றும் இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வருந்தும் பெற்றோர்கள் மற்றும் இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் தனது மகனுக்கு திருமணம் ஆகாததால் அம்மாக்கள் வருத்தத்தில் அரங்கத்தில் பேசியுள்ளனர். ஒருவர் நானே பெண்ணிற்கு நகை போட்டு திருமணம் செய்து கொள்வேன் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.
இதற்கு பெண்ணை எதற்காக நகையுடன் சேர்த்து வைக்கின்றனர் என்று பெண் கூறிய நிலையில் இதற்கு நடுவரும் தனது கருத்தை கூறியுள்ளார்.
மேலும் அதே அம்மா அதற்காக ஹீரோ மாதிரி வரமுடியுமா சார் என்று கூறி அரங்கத்தை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |