Tamizha Tamizha: மாமியாரால் மருமகன் அனுபவிக்கும் கொடுமைகள்... வாயடைத்துப் போன தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் அம்மா பேச்சைக் கேட்கும் மனைவிகள் அதனால் அவதிப்படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அம்மா பேச்சைக் கேட்கும் மனைவிகள் அதனால் அவதிப்படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் மனைவிகள் அம்மாவின் பேச்சைக் கேட்டு செய்யும் செயல்களால் கணவர்கள் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண் ஒருவரின் அம்மா மருமகன் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு சட்டை எடுத்துக் கொடுத்து அதைத்தான் போட்டு வரனும் என்று கூறியுள்ளார்களாம்.
இதனைக் கேட்ட தொகுப்பாளர் அந்த மனிதரின் நிலையைக் கண்டு வாயடைத்துப் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |