Tamizha Tamizha: காதலியை அடிப்பதை பெருமையா பேசுறீங்க? அரங்கத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதல் எனக்கு வலியை தந்தது மற்றும் காதல் எனக்கு வாழ்க்கையை தந்தது என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் காதல் எனக்கு வலியை தந்தது மற்றும் காதல் எனக்கு வாழ்க்கையை தந்தது என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் காதலர் ஒருவர் தனது முன்கோபத்தினால் காதலி தன்னை விட்டுச் சென்றதாக கூறியுள்ளார். பெண் ஒருவரும் தனது காதல் வேலைக்கு இடையூறாக இருந்ததால் வேண்டாம் என்று வெளியே வந்ததாக கூறியுள்ளார்.
எதிரே அமர்ந்திருந்த மற்றொரு ஜோடி நானும் தனது காதலியை அதிகமாக அடிப்பேன்... அவர் என்னுடன் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
காதலியை அடிப்பதை பெருமையாக கூறுகிறீர்கள்... இது தவறு என வன்மையாக தொகுப்பாளர் கண்டித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |