Tamilzha Tamizha: அரங்கத்தில் தந்தைக்கு போன் செய்த பெண்... பின்பு நடந்தது என்ன?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாற்று ஜாதியில் திருமணம் செய்தவர்களும் மற்றும் சமூகம் தரும் சவால்களும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் மாற்று ஜாதியில் திருமணம் செய்தவர்களும் மற்றும் சமூகம் தரும் சவால்களும் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
மாற்று ஜாதியில் திருமணம் செய்தவர்கள் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடந்த சம்பவத்தைக் குறித்து கூறியுள்ளனர்.
மற்றொரு ஜோடி தனது தந்தையிடம் போனில் பேசுவதற்கு முயற்சித்த போது, பெயரைக் கேட்டவுடன் குறித்த போன் கட் ஆகியுள்ளது. இதனை பார்த்த தொகுப்பாளர் மனம் கவலைப்பட்டு எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
