Tamizha Tamizha: அவள் பாம்பை விட விஷம் சார்... அரங்கத்தில் மருமகள்கள் மோதல்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் சீறும் சின்ன மருமகள் மற்றும் பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் சீறும் சின்ன மருமகள் மற்றும் பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் வீட்டிற்கு வந்த சின்ன மருமகள்களின் செயல்கள் பெரிய மருமகள்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமணமான 3 மாதத்தில் தனிக்குடுத்தனம் செல்லும் அளவிற்கு வந்துவிடுகின்றனர் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதுவே பெரிய மருமகள் என்றால் மாமியார் கொடுக்கும் வேலைகள் அனைத்தும் செய்துவிட்டு, தனக்கென நேரத்தை செலவிடாமல் இருப்பதாக கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |