Tamizha Tamizha: பேய் பிடித்ததால் அம்மாவின் காதை கடித்து துப்பிய மனிதர்! தெறித்து ஓடிய தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் மற்றும் நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் மற்றும் நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இத்தருணத்தில் அரங்கத்தில் நபர் ஒருவர் தனது உடம்பிற்குள் 15 பேய் இருந்ததாகவும், வீட்டில் அம்மாவின் காதை கடித்து துப்பியதாகவும், அப்பாவையும் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
பொறுமையாக அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தொகுப்பாளர் சட்டென தள்ளிவந்துள்ளார். மற்றொரு புறம் பேய் இல்லை என்று கூறி தனது விவாதத்தினை சிலர் எடுத்து வைத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |