கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? வெறும் 250 ரூபாய்க்கு இத்தனை ஆயிரம் வட்டியாம்! உஷார்
வெறும் 250 ரூபாய் கிரெடிட் கார்டில் பயன்படுத்திய நபருக்கு இரண்டு ஆண்டுகள் வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் பயங்கர அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியைப் போன்று தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி வேறொரு ரிவியில் நடைபெற்றுள்ளது.
இதில் இந்த வார தலைப்பில் வங்கியில் கடன் வாங்கி வாழ்ந்தவர்கள் மற்றும் வீழ்ந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் நபர் ஒருவர் கிரெடிட் கார்டு வாங்கிய புதிதில் வெறும் 250 ரூபாய் மட்டும் ஸ்வைப் பண்ணியுள்ளாராம். அது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு வட்டியாக சேர்ந்த 65000 கட்ட கோரியுள்ளார்களாம்.
அதாவது நாம் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு 36 சதவீதம் வட்டி வசூலிப்பதாகவும், இவை நாம் கடனாக வைத்திருக்கும் ஒரு ரூபாய் வரை இந்த கணக்கில் தான் வசூலிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியினை அவதானிக்கும் மக்கள் கிரெடிட் இனிமேல் நமக்கு அத்தியாவசிய தேவையா? அல்லது ஆடம்பரமா? என்று நிச்சயம் நன்கு யோசித்து பார்க்க வேண்டும்.