Tamizha Tamizha: சமையல் வேலை சுமையானது என ஆதங்கத்தை கொட்டிய இல்லத்தரசி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் சமையல் வேலை சுகமானது மற்றும் சுமையானது என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் சமையல் வேலை சுகமானது மற்றும் சுமையானது என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் சமையல் வேலைகளை விரும்பி செய்பவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்தை கூறியுள்ளனர்.
மற்றொரு புறம் சமையல் சுமையானது என்ற தலைப்பில் பேசியவர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். ஆரோக்கியத்திற்கு சமையல் என்று கூறினாலும், முடியாத தருணத்தில் சற்று சமாளித்து சாப்பிட வேண்டும் என்பதை ஒரு பெண் முன் வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |