தமிழா தமிழா அரங்கத்தையே மிரள வைத்த சிறுவன்... அதிர்ச்சியில் நடிகைகள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்கள்... அசைவப் பிரியர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அசைவமாக இருந்து சைவத்திற்கு மாறியவர்கள் மற்றும் அசைவப் பிரியர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் சைவப்பிரியராக சிறுவன் ஒருவன் முட்டை சாப்பிடுவதைக் குறித்து பேசியுள்ளார். இவரது பேச்சை கேட்ட சிறப்பு விருந்தினர், நடுவர்கள் என சக அரங்கமே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.
சிறுவன் ஒருவன் முட்டைக்குள் முதலில் ஹார்ட் தான் உருவாகும் அது துடிச்சிட்டே இருக்கும் போது அதை எப்படி நம்முடைய தேவைக்காக நிறுத்தலாம் என்று கேட்டு மேடையை வியக்க வைக்கிறார், இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |