Tamizha Tamizha: உடன்கட்டை ஏறுவதற்கு நீங்கள் தயாரா? பெண்ணிடம் கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையை கிராமத்தில் தேர்வு செய்த நகரத்துவாசிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்வது கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார். பெரியோர்கள் கூறுவதை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபப்பட்ட தொகுப்பாளர் பெரியோர் சொல்வதை அனைத்தையும் நீங்கள் செய்து வர்றீங்களா? அப்போ உடன்கட்டை ஏறுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |