Tamizha Tamizha: நிச்சயதார்த்தத்திற்கு பின்பு ஏற்பட்ட காதல்... கணவரை நினைத்து கண்கலங்கும் மனைவிகள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பின் மலர்ந்த காதல் கதைகள் என்ற தலைப்பில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பின் மலர்ந்த காதல் கதைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கலந்து கொண்ட ஜோடிகள் தனக்கு வந்துள்ள கணவர் நிச்சயத்திற்கு பின்பு செய்த காரியத்தை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
ஒருவர் தனது மனைவியை வெற்றி பெற பல வழிகளில் உதவி செய்து வருவதாகவும், மற்றொரு கணவர் தனது மனைவிக்கு நிச்சயத்திற்கு பின்பு தானே நகை போட்டு திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் இந்த காதல் கதையை கேட்ட தொகுப்பாளர் வியப்பில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |