Tamizha Tamizha: அப்பா இல்லாத இடத்தை நிரப்பிய தாத்தா! அரங்கத்தில் பேத்தி வாங்கிய சத்தியம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேரப்பிள்ளைகள் வந்த பின்னால் எங்கள் வாழ்வே மாறியது... சிலாகிக்கும் தாத்தா பாட்டிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பேரப்பிள்ளைகள் வந்த பின்னால் எங்கள் வாழ்வே மாறியது... சிலாகிக்கும் தாத்தா பாட்டிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பேரப்பிள்ளைகள் தாத்தா பாட்டியை செல்லமாக அழைக்க கூறிய தொகுப்பாளரை பிள்ளைகள் அனைவரும் அதிர வைத்துள்ளனர்.
பேத்தி ஒருவர் தனது தாத்தா சிகரெட் பிடிப்பது பிடிக்காது என்று கூறியதுடன், அவரை அழைத்துக் கொண்டு சென்ற தொகுப்பாளர் தாத்தாவிடம் சத்தியம் வாங்க சொல்கின்றார்.
அக்குழந்தையும் தாத்தாவிடம் சத்தியம் செய்யக் கோரியுள்ளது. அதற்கு அது கொடுத்த காரணம் ஒட்டுமொத்த அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பா இல்லாத இடத்தினை தாத்தா தான் நிரப்புகின்றார் என்று கூறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |