குடிமகன்களிலேயே நான் தமிழ் மகன் - சாக்கடை நீரில் உருண்டு புரண்ட போதை ஆசாமி
திண்டுக்கல் மாவட்டம் அருகே நன்றாக சரக்கடித்து விட்டு சாக்கடை நீரில் உருண்டு புரண்ட போதை ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாக்கடை நீரில் உருண்டு புரண்ட போதை ஆசாமி
திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர், குடவாணாறு ஆற்றுப்பாலம் அருகே சாக்கடை கழிவுநீரில் ஒருவர் நீண்ட நேரமாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் சென்ற சிலர் அவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, அவர் தலைக்கேறிய மதுபோதையில், என் பெயர் சக்திவேல், நான் ஜாலியா இங்கு இருக்கிறேன். ரொம்ப நிம்மதியா இருக்கிறேன். தண்ணி போட்டேன், தண்ணில கிடக்கிறேன். நான் குடிமகன் அல்ல, தமிழ் மகன். என்னை நன்றாக போட்டோ எடுத்து வெளியில் விடுங்கள் என்று அந்த சாக்கடை நீரில் உருண்டு புரண்டார்.
பல மணி நேரம் அந்த சாக்கடையில் தூங்கிக்கொண்டு இருந்த சக்திவேல், மதுபோதை தெளிந்ததும் எழுந்து ஓடிவிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனால் மட்டுமே இது பண்ண முடியும் என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.