மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எடப்பாடி: மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்
உடல்நிலைக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில், முதல்வர் எடப்பாடிக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பிரச்னை இருப்பது தெரியவந்ததையடுத்து, நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கையில் வந்துள்ளது.
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.