porattam movie review : ரசிகர்களை கவர்ந்த ‘போராட்டம்’ - மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்து வரும் பெரும் வரவேற்பு குறித்து இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.

‘போராட்டம்’ திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ரீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல்கள் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியாவின் வசந்தி திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு திரையிடலில் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரையிடலுக்குப் பின்னர் படம் குறித்து ரசிகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் என்ன? திரைப்படம் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் எப்படி இருந்தது? ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு வவுனியா ரசிகர்கள் வழங்கிய வரவேற்பையும், அவர்களின் நேரடி கருத்துகளையும் இந்த காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |