ஆன்லைனில் லீக்கான மாநாடு! திரையரங்குகளை திணறடித்த சிம்பு ரசிகர்கள்
பல சிரமங்களுக்கிடையே வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் முதல் நாளிலேயே ஆன்லைனில் வெளியானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று மாலை ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டது.
இதைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ஒருவழியாக இன்று காலை மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இது படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.
மாநாடு திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ் பிளாஸ்டர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.
இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளை திணறடித்த காட்சிகளும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#Maanaadu - My thoughts !! pic.twitter.com/1nLGyxQuVq
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 25, 2021
#SilambarasanTR #Maanaadu Title Card 🔥🔥🔥🔥#MaanaaduFDFS @SilambarasanTR #மாநாடு pic.twitter.com/b79LrHWZXG
— குட்டிசாக்கு (@itz_MaddyRaji) November 25, 2021