பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் திரைபட துறையின் பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் இழப்பு திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர் ஜெயமுருகன்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமாக திகழ்ந்தவர் தான் ஜெயமுருகன். இவர் 1995ல் வெளிவந்த சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ரோஜா மலரே படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிய இவர், ஜெய் ஆகாஷ் நடித்த 'அடடா என்ன அழகு', கார்த்திக் நடித்த 'தீ இவன்' ஆகிய படங்களை தயாரித்து, இயக்கினார். மேலும் 'புருசன் எனக்கு அரசன்' படத்தையும் அவர் தயாரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி தான் இயக்கிய சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பன்முக திறமை கொண்ட ஜெயமுருகன் தனது இறுதி காலத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயமுருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்துள்ளார். இன்று மாலை இறுதிசடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |