திரையுலகில் அடுத்த அதிர்ச்சி! பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
தஞ்வாவூர் மண்ணை எடுத்து என்ற பாடலைப் பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் உடல்நலக் குறைவினால் இன்று காலமானார்.
பாடகர் கிருஷ்ணராஜ்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தான் தேவா. இவர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது பாடல் மூலம் அறிமுகமானவர் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இவர் தேவா இசையமைத்த அதிகாலை சுபவேளை திரைப்படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகியுள்ளார். 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, காத்து அடிக்குது, சிரிச்சுட்டு போனாலும், தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற ஹிட் பாடல்கள் தற்போதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

அதுமட்டுமின்றி பருத்தி வீரன் படத்தில் அய்யயோ பாடல், கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கடைசியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார். இந்நிலையில் 75 வயதான கிருஷ்ணராஜ் வயது மூப்பு, உடல்நலக் குறைவால் காலமானார்.
தேவா மறைந்து சில தினங்களில் அவருடன் இருந்த பாடகர் மறைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |