சமூக ஊடகங்களுக்கு சவால்விடும் தனி ஒருவனின் புரட்சி ! Scooterயை நூலகமாக மாற்றிய நபர்
இன்றைய சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர், காலையில் எழுந்தவுடன் பலரும் விழிப்பதே ஸ்மார்ட்போன்களில் தான்.
இதனால் புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துகொண்டு போகிறது, இதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு அதை வெற்றிகரமாக்கி கொண்டிருக்கிறார் 32 வயதான Simon.

தன்னுடைய Scooterயை நூலகமாக மாற்றியிருக்கிறார், புத்தகங்கள் மீது இவர் கொண்ட தீராத அன்பே, இவ்வாறு செய்ய காரணமாம்.
தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும் மாலை 2 மணிநேரத்துக்கு இவரது நூலகம் செயல்படுகிறது, அதாவது Simonனின் வேலை நேரம் முடிந்தவுடன் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை நூலகத்தை நடத்துகிறார்.

கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான புத்தகங்கள் இவரிடம் உண்டு, பலர் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துசென்று படித்துவிட்டு திருப்பி அளிக்கிறார்கள், இதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை Simon.
2024ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது நூலகம் இன்றுவரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, 43 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் வாசகர்களாக இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிபுரிந்து அவர்கள் தங்கள் சொந்த புத்தகங்களை வெளியிடவும் துணை நின்றிருக்கிறார்.
”புத்தகங்களை வாசிப்பது பிடித்தமான ஒன்று, அனைவராலும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க இயலாது” என கூறும் Simon, ஈரோடு மற்றும் தஞ்சாவூரிலும் இதுபோன்று நூலகங்களை நடத்த வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |