பிரபல நடிகை சித்ராவின் கணவர் மீண்டும் கைது? இத்தனை கோடியை ஏமாற்றினாரா?
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பணமோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, தங்களுடைய மகன் எந்த தவறும் செய்யவில்லை என ஹேம்நாத்தின் பெற்றோர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஹேம்நாத் மீது ஜெஜெ நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது, இதுதொடர்பாக தற்போது சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுபடியும் கைது செய்து காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர்.