வீதியில் முடிந்த ஆடி அமாவாசை விரதம்! இலங்கையில் இதுவரை இடம்பெறாத அதிர்ச்சி சம்பவம்
ஆடி அமாவாசை விரதத்தை நபர் ஒருவர் வீதியில் முடித்துக் கொண்ட சம்பவம் ஒன்று ஈழத்தில் பதிவாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கின்றது.
இலங்கையில் பொருளாதார பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
தற்போது QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
ஆனாலும், எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது. இதனிடையே, எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்டுள்ளார்.
யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும்.
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.
சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை விரத வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.