பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்குவது யார்? விரைவில் வெளியாகும் ப்ரொமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரொமோ காட்சி புதுச்சேரியில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் ப்ரொமோ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன் நிறைவுபெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இதனை தொகுத்து வழங்குவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் எட்டாவது ப்ரொமோ காட்சி விரைவில் ஆரம்பமாக உள்ளது.

ஆனால் இந்த ஆண்டு கமல்ஹாசன் குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்பதால் இவருக்கு பதிலாக வேறு எந்த நடிகர் தொகுப்பாளராக வருகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
    
    viral video: 96 பட நடிகையா இது? நீச்சல் உடையில் அசத்தும் அழகு.. மின்னல் வேகத்தில் குவியும் லைக்குகள்
தற்போது புதுச்சேரியில் பிக் பாஸ் சீசன் 8ன் ப்ரொமோ படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், இதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் பிக்பாஸ் 8வது சீசனின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        