சர்வாதிகாரியாக மாறிய நிக்சன்- வெடித்து சிதறும் பிக்பாஸ் வீடு- காரணம் யாரு அர்ச்சனாவா?
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் விஷ்ணு - அர்ச்சனா இருவரின் வாக்குவாதம் முற்றி போயுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில நிக்ஷன் அரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற வாரங்கள் போல் அல்லாமல் இந்த வாரம் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நிக்ஷன் சர்வதிகார ஆட்சி முறை என்றால் என்ன? என்பதனை மக்களுக்கு செய்து காட்டி வருகிறார்.
பிரதீப் விடயத்தில் பிளவுப்பட்ட போன மாயா - விசித்திரா இருவரும் பூகம்பம் டாஸ்க் மூலம் ஒன்றாக இணைந்து விட்டார்கள்.
இதனால் பூர்ணிமா கடந்த இரண்டு தினங்களாக தனிமையில் இருந்து சில வேலைகளை பார்த்து வருகிறார்.
விஷ்ணுவை தொங்க விட்ட அர்ச்சனா
இந்த நிலையில் வைல்ட் கார்ட் என்றியாக உள்நுழைந்த அர்ச்சனாவை மற்ற போட்டியாளர்கள் கொஞ்சம் ஏளனம் செய்து வருகின்றார்கள்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் விஷ்ணு – அர்ச்சனா இடையே மோதல் வெடித்துள்ளது.
அதில் விஷ்ணு, “ இங்க இருக்க முடியலனா எகிறி குதிச்சி வெளியில போய்டுங்க, நீங்க ஒரு தண்டம் சிம்பிளி வேஸ்ட்” என்று சொல்ல, பதிலுக்கு அர்ச்சனா, “ அப்போ நீங்க வந்து” என்று டஸ்ட்பின்னை எடுத்து காட்டுகிறார்.
வாக்குவாதம் காரசாரமாக சென்றுக் கொண்டிருக்கும் பொழுது பூர்ணிமா - மாயா இருவரும் நக்கலாக சிரித்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
இவர்களின் சண்டையை விலக்க விஜய் பல தடவைகள் முயற்சி செய்தாலும் இருவரும் வாயை மூடுவது போல் இல்லை.
விஷ்ணுவை பார்த்து அர்ச்சனா சவால் விடும் வகையில், “ நான் அழுதுட்டேனா பார்த்துக்குறேன்.. உனக்கே இவ்வளவு இருக்கும் போது எனக்கும் இருக்கும்” என்று சொல்கிறார்.
இனி வரும் நாட்களில் அர்ச்சனா எப்படி விளையாட போகிறார் என்பதனை பொருத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |