வெறுங்கையுடன் பரிதாபமாக சென்ற தாமரைக்கு அடுத்த நாளே அடித்த அதிர்ஷ்டம்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெறுங்கையுடன் ஆட்டாவில் சென்ற தாமரைக்கு அடுத்த நாளே வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளது.
நாட்டுப்புற கலைஞரான தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இறுதிபோட்டிக்கு முந்தைய வாரம் வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் விஜய் டிவி-ன் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் தாமரை செல்வி கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை செல்வியின் சமையலை தான் அனைவரும் பாராட்டி வந்தனர்.
அப்படி இருக்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது தாமரை செல்வியின் பெயரும் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்துவாரா இல்லையா என்று பார்க்கலாம்.