திருமண விழாவிற்கு ஜோடியாக வந்த தமன்னா.. காண்போரை பொறாமைப்பட வைத்த புகைப்படங்கள் இதோ
தமன்னா - விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமன்னா - விஜய்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா.
கடைசியாக ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஆடிய பாடலும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரெண்டானது.
இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட் பக்கம் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார்.
வெளியில் செல்லும் தமன்னா - விஜய் இருவரும் ஜோடியாக தான் செல்வார்கள்.
இதன் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.
வைரல் புகைப்படங்கள்
அந்த வகையில், பாலிவுட் நட்சத்திரங்களான ரந்தீப் ஹூடா - லின் லைஷ்ராம் ஆகிய இருவரும் நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பிரபலங்களின் ஒருவராக தமன்னா - விஜய் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணத்தில் தமன்னா கருப்பு நிற சேலை அணிந்திருந்தார். தமன்னாவின் நிறத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜொலிக்கும் வகையில் இருந்தது.
மேலும் தமன்னாவுடன் வந்த விஜய் எளிமையான கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்தார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், தமன்னாவின் திருமணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |