தமன்னாவை கழட்டிவிட்டுட்டாரா விஜய் வர்மா? Breakup-க்கு இதுதான் காரணமாம்..
நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவும் காதல் உறவை முடித்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் “கேடி” என்ற படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமாகியவர் தான் நடிகை தமன்னா.
அதன் பின்னர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் கதாநாயகியாக சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
வியாபாரி திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுக்க, இதனை தொடர்ந்து தமன்னா பையா, வீரம், சுறா, படிக்காதவன், கண்டேன் காதலை என பல படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அத்துடன் தமிழில் கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மெகா வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார்.
காதல் முறிவுக்கு என்ன காரணம்?
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக லிவ்வின் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. மாறாக தற்போது இருவரும் அவர்களின் காதல் உறவை முறித்து கொண்டார்களாம்.
தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, படங்களில் சக நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு ஏற்றால் போல் தமன்னாவுடன் கடந்த சில நாட்களா பொது வெளியில் தனியாக வந்து செல்வதை அவதானித்த ரசிகர்கள், “காதல் முறிவு உண்மையாக இருக்குமோ?” எனக் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |