வெறும் 6 நிமிட நடனத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? டாப்பில் இடம்பிடித்த தமன்னா!
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நடிகை தமன்னாவின் அதிரடி நடனத்துக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான விகரங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது படு வைரலாகியுள்ளது.
நடிகை தமன்னா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து தமன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்துவிட்டார்.
இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் ஆடிய நடனம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து,'ஸ்டிரி 2, ரெய்டு 2' படங்களிலும் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடினார்.தமன்னாவிற்கு தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவாவில் நடனமாடி இருந்தார். அந்த வீடியோ கூட ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டது.

சம்பள விபரம்
இந்த கொண்டாட்டத்தில் 6 நிமிடங்கள் தமன்னா நடனமாடி இருந்தார். வெறும் 6 நிமிட பெர்ஃபார்மன்ஸிற்கு தமன்னாவிற்கு சுமார் ரூ. 6 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்ற கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் ரசிகர்கள் மத்தியில் தற்போது படு வைரலாகியுள்ளதுடள், இணையத்தில் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |