தலைவாழை இலை விருந்தை அம்மன் கெட்டப்பில் விரும்பி உண்ணும் தமன்னா! வியப்பில் தமிழ் ரசிகர்கள்
food
tamanna
amman getup
By Nivetha
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தலைவாழை இலையில் அம்மன் வேடமிட்டு நடிகை தமன்னா உணவு சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்த நிலையில் திடீரென நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ’வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை நான் கடவுளாகவே உணர்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழை இலைகளின் நன்மைகள் ஏராளம்.
- வாழை இலையில் நோய் எதிர்ப்பொருளான பாலிபினால் காணப்படுகிறது.
- காற்று மாசு, புகைபிடித்தலால் மனிதர்களை தாக்கும் இதய நோய், புற்றுநோய், விரைவாக மூப்படைதல் போன்றவற்றுக்கு எதிப்புத்தன்மையை தரக்கூடியது இந்த நோய் எதிர்பொருள்.
- நன்மைகள் நிறைவாக இருந்தாலும் வாழை இலையை நேரடியாக சாப்பிட முடியாது. கசப்பும், துவர்ப்பும் நிறைந்தது வாழை இலை. எளிதாக ஜீரணம் ஆகாது.
- இலையில் பரிமாறும் உணவைச் சாப்பிடுவதன் மூலமே இதிலிருக்கும் நோய் எதிர்பொருட்கள் நம் உடலில் சேர்கின்றன. வாழை இலையில் உள்ள பச்சையம் வயிற்றுவலி மற்றும் தோல் நோய்களை தடுக்கவல்லது.
- இலையில் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்-ஏ, கால்சியம் போன்றவையும் நம் உடலில் சேர்கிறது. வாழை இலை சாப்பாடு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும். சிறுநீரக பாதிப்புகளையும், கல் அடைப்பையும் தடுக்கக்கூடியது.
- இலையைச் சாறாக அரைத்துப் பூசினால் சிறிய தோல் காயங்கள் நீங்கும். அரிப்பு, வேனல் கட்டி போன்ற தோல் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கும்.
- பூச்சிக்கடி, தேனீக்கடி, சிலந்திக்கடி போன்றவற்றுக்கு இதன் மருத்துவக் குணங்கள் உதவுகின்றன.
-
வாழை இலை குளிர்ச்சி நிறைந்தது. தீக்காயம் பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைப்பது இதற்காகத்தான்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US