Viral video: அதிக வேக கிக்கால் மாஸ்டரை வீழ்த்திய 1 வயது பையன்- பார்க்காமல் விடாதீங்க!
மாஸ்டர் செசார் கல்வோ (Master Cezar Galvao) உடைய ஒரு மகன் அதிக வேக கிக்கால் அவரையே வீழ்த்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாஸ்டர் செசார் கல்வோ
மாஸ்டர் செசார் கல்வோ (Master Cezar Galvao) என்பவர் ஒரு பிரபலமான பிரேசிலிய மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணராக அறிப்படுகிறார்.
இவர், 6வது டான் டேக்வாண்டோ மாஸ்டர் ஆவார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கலையில் அனுபவம் கொண்டவராக திகழ்கிறார்.
அதிலும் குறிப்பாக அதிக வேக கிக்கிங் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சி கலை சார்ந்து உலக அளவில் புகழ் பெற்றவராகும் பார்க்கப்படுகிறார்.
அத்துடன், மாஸ்டர் செசார் கல்வோ கடந்த 1991-ம் ஆண்டு Pan American Games போட்டியில் வெண்கல பதக்கமும், 1993-ம் ஆண்டு World Games போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
மகனின் சாதனை
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாஸ்டர் செசார் கல்வோ, ஒரு வயதில் மகன் செய்யும் அதிக வேக கிக்கிங் காணொளிகளை பகிர்ந்து வருகிறார்.
1 வயதில் தான் குழந்தைகள் எழுந்து நிற்கவே ஆரம்பிக்கும், ஆனால் இவருடைய மகன் சிறு வயதிலேயே டேக்வாண்டோ (Taekwondo) பயிற்சி செய்து கலைஞராக உருவாக்கி வருகிறார்.
குறித்த சிறுவன், தனது நுட்பமான கிக்கிங் திறமைகளால் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கப்பட்டவராக திகழ்கிறார். காணொளியை பார்த்த இணையவாசிகள், “குழந்தைக்கு வலிக்காதா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |